×

கமல் கட்சிக்கெல்லாம் போகமாட்டேன்... மொதல இதான் முக்கியம்... 
 

நடிகர் ஆதி தனது சமீபத்திய பேட்டியில் கமல் கட்சிக்கு கூப்பிட்டாலும் போகமாட்டேன் எனத் தெரிவித்து இருக்கிறார். 
 
 
கமல் கட்சிக்கெல்லாம் போகமாட்டேன்... மொதல இதான் முக்கியம்...

கோலிவுட்டில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆதி. தொடர்ந்து, அவர் ஷங்கரின் தயாரிப்பில் உருவான ஈரம் படத்தில் நடித்தார். அப்படம் ஆதியை அனைத்து வகையான ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது. ஆனால், அவருக்கு பெரிய வாய்ப்புகள் வரவில்லை. வரும் படங்களில் கூட சிலவற்றை தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகிறார். 

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இவரின் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர். இதில் ஆதி கலந்து கொண்டு மக்களுக்கு உதவிகளை வழங்கினார். அப்போது அவரிடம், கமல் அரசியலுக்கு அழைத்தால் செல்வீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆதி, அரசியலுக்கு செல்லமாட்டேன். நடிப்பில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறேன். நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் நானும் மக்களும் அவர்களை ஆதரிப்போம் எனக் கூறியிருக்கிறார். 

தெலுங்கு திரையுலகில் உருவாக இருக்கு சிவுடு படத்தில் அடுத்ததாக ஆதி நடிக்க இருக்கிறார். சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் நிக்கி கல்ராணி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News