×

எனக்கு வாய்லதான் சனி... அனைவரையும் உரகு வைத்த சுரேஷ்!

போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசும் டாஸ்க் நேற்றும் தொடர்ந்தது. இதில் ஜித்தன் ரமேஷ், ஷிவானி, சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத் தங்களது கடந்த காலம் குறித்து கூறினர். ஷிவானி 2 நிமிடங்களுக்குள் தன்னுடைய ஸ்டோரியை சொல்லி சென்றுவிட இது ப்ரோமோல கூட வராது என நிஷா அவரை வாரினார்.
 

ஐஏஎஸ் எக்ஸாம் எழுதி பெயிலான பின் சினிமா சான்ஸ் வந்ததையும் அடுத்து வந்த பிரச்சினைகளையும் எந்த பூச்சுமின்றி ரமேஷ் சொன்னார். தான் வேலை பார்த்துக்கொண்டே படித்ததை அனிதா சம்பத் எமோஷனலாக எடுத்து உரைத்தார். தொடர்ந்து பேசிய சுரேஷ் சக்கரவர்த்தி தன்னுடைய வாழ்வில் பட்ட கஷ்டங்களை அழுத்தமாக தெரிவித்தார்.

தன்னுடைய ஒரே மகனுக்கு நோய் வந்து பட்ட கஷ்டங்களை கூறியபோது அவர் கண்கள் லேசாக கலங்கியது. தொடர்ந்து சமாளித்துக்கொண்டு இப்போது மகன் நன்றாக இருப்பதை சொன்ன அவர், இங்க இதை சொல்லலாமா தெரியல? மருமக கன்சீவா இருக்காங்க. மார்ச் மாசம் டெலிவரி என சந்தோஷமாக எண்ட்ரி கார்டு போட்டார். அனிதாவிற்கும், சுரேஷுக்கு தொடர்ந்து உரசல்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இவரின் இந்த ஸ்டோரி ரசிகர்களை உருக செய்துள்ளது.


 


 


 

null


 

null


 

From around the web

Trending Videos

Tamilnadu News