×

மிட்நைட் பார்ட்டியில் திரிஷாவுடன் மொட்டை மாமா - வைரல் புகைப்படம்!

நடிகை திரிஷாவுடன் பிக்பாஸ் 4 பிரபலம்

 

லேசா லேசா படம் மூலம் அறிமுகம் ஆனவர் திரிஷா. ஆனால் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது என்னவோ கில்லிதான். இந்த வெற்றிக்கு பின் திரிஷா காட்டில் அடை மழைதான். தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த திரிஷா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் விஜய்,அஜித்,ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுடனும் ரவுண்ட் கட்டி நடித்தார். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.  இதற்கிடையில் பெரும்பாலான நடிகைகள் வெப் சீரிஸில் நடித்து பணம் சம்பாதிக்க பிளான் செய்து களத்தில் இறங்கிவிட்டார்.

இந்நிலையில் தற்ப்போது நடிகை த்ரிஷாவுடன் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி நைட் பார்ட்டியில் பங்கேற்று எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News