×

வயசானவங்க ஜெயிக்க முடியாதுன்னா எதுக்கு அவங்கள SHOW'க்கு கூப்பிடுறீங்க..?

எவிக்ஷனில் அதிரடியாக வெளியேற்றப்பட்டார் சுரேஷ் சக்ரவர்த்தி

 
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எவிக்ஷனில் சுரேஷ் வெளியேறிவிட்டதாக நேற்றிலிருந்தே தகவல் வெளிவந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் கமல் எவிக்ஷன் கார்டில் சுரேஷ் பெயரை படித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

எனேவ அவர் வீட்டில் இருந்து வெளியேறியது உறுதியாகிவிட்டது. சுரேஷ் வீட்டில் ஆரம்பித்தில் இருந்தே சிறப்பான போட்டியாளராக பெயரெடுத்தவர். இதற்கிடையில் அர்ச்சனாவின் வருகைக்கு பிறகு அவர் அமைதியாகிவிட்டார். அதுவும் பிக்பாஸ் திட்டமிட்டவையாக தான் இருக்கும். காரணம், அப்போது தான் அவரை வெளியேற்ற சுலபம் என்பதால்.

சுரேஷ் வெளியேறுவதை விட வெளியேற தகுதியானவர்கள் நிறைய பேர் வீட்டில் உள்ளார்கள். அப்படி இருக்க ஏன் இப்படி ஒரு பொய்யான நிகழ்ச்சியை நடத்தணும்? சுரேஷின் பெர்பார்மென்ஸை பார்த்து இந்த முறை சீனியர் சிட்டிசன் தான் டைட்டில் வெல்வார் என்று நினைத்திருந்தோம். ஆனால் சுரேஷ் வெளியேறிவிட்டதை  மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News