Connect with us
suresh kamatchi

Cinema News

நான் வீழ்வேனென்று நினைத்தாயே?!.. மாநாடு தயாரிப்பாளர் போட்ட மாஸ் டிவிட்…

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகாது எனவும், எப்போது ரிலீஸ் என பின்னர் அறிவிக்கிறேன் என இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று டிவிட்டரில் அறிவித்து சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஏனெனில், சிம்பு ரசிகர்கள் பலரும் தியேட்டரில் படம் பார்க்க ஆன்லைன் புக்கிங் செய்திருந்தனர்.

ஏற்கனவே சிம்பு படமென்றால் ரிலீஸின் போது பஞ்சாயத்து வரும். அன்பானவன் அசராதவன், அடங்காதவன் படப்பிரச்சனை பல வருடங்களாக அவரை துரத்தி வருகிறது. எனவே, அது காரணமாக இருக்குமோ என சந்தேகம் எழுந்தது. சில சிம்பு ரசிகர்கள் ‘அரசியல் ரீதியான காரணங்கள்தான் காரணம்’ எனக் கூறி வந்தனர்.

maanaadu

மாநாடு படத்திற்கு திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிக செலவு செய்து இப்படத்தை உருவாக்க வேண்டியிருந்தது .எனவே, பைனான்சியர்களிடம் கடன் வாங்கியிருந்தார் சுரேஷ் காமாட்சி. ஆனால், அந்த பணத்தை அவரால் திருப்பு தர முடியவில்லை. எனவேதான், அவர்கள் இப்படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கவில்லை எனக்கூறப்பட்டது.

பின்னர் ஒருவழியாக நேற்று இரவு பேச்சுவார்த்தை நடந்து இப்படம் வெளியாவது உறுதியானது. இதன் பின்னரே சிம்பு ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். எல்லாம் சரியாகிவிட்டது. ரசிகர்கள் சந்தித்த பிரச்சனைகளுக்கு வருந்துகிறேன். தற்போது இது நம்முடைய நேரம். கடவுளுக்கு நன்றி. எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி’ என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top