×

லெமன் ஜூஸ் குடி... போட்டு தரட்டா? நாரதர் வேலையை ஆரம்பித்த சுரேஷ்!

பிக்பாஸ் வீட்டின் கண்டெண்ட் மன்னன் சுரேஷ் சக்கரவர்த்தி தான் போலும். ஏற்கனவே அனிதா-சுரேஷ் சக்கரவர்த்தி இடையிலான சண்டைகளை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் கொடிகட்டி பறக்கின்றன. இந்த நிலையில் நேற்றும் செம கண்டெண்ட்களை சுரேஷ் வாரிவழங்கினார்.
 

வழக்கம்போல குக்கிங் டீமில் நேற்று பிரச்சினை வெடித்தது. காரசராமாக ரேகாவுடன், சனம் சண்டை போட்டு கொண்டிருந்தார். குக்கிங் டீமை விட்டு விலகிய சுரேஷ் தான் பிரச்சினைக்கு காரணம் என பின்னர் தெரிய வந்தது. ஆனால் அதுகுறித்து எந்தவொரு கவலையும் இன்றி ஜாலியாக சோபாவில் காலை நீட்டி படுத்துக்கொண்டு (லேட்டஸ்ட் மீம்ஸ் கான்சப்ட் இதுதான்) வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

நடுவில் சனம் ரேகாவிடம்,'' தலை சுத்துது, டைம் வேஸ்ட், எனர்ஜி வேஸ்ட், அதுக்கு இப்போ என்ன பண்ணலாம் என கேட்டார். பதிலுக்கு ரேகா பேசுவார் என எதிர்பார்த்தால், சுரேஷ் நடுவில் புகுந்து, ''லெமன் ஜூஸ் குடி நான் போட்டு தரேன்,'' என கூலாக சொன்னார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இந்த ரணகளத்திலும் ஸ்கோர் பண்றீங்களே பாஸ் என கலாய்த்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News