×

இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானல் சென்ற  சூரி, விமல் மீது வழக்கு பதிவு!

கொரோனா பேரிடர் காரணமாக இந்தியா முழுவதும் 3 மாதங்களுக்கு மேலாக சுற்றுலாத்துறை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் பகுதியில் பேரிஜாம் ஏரிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடைவிதிகப்படுள்ளது. ஆனால், தடைகளை மீறி நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகிய இருவரும் அங்கு சென்று  பேரிஜன் ஏரியில் தடையை மீறி மீன் பிடித்து அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

 

இது மிகப்பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி கடந்த ஜூலை 17 ஆம் தேதி அவர்கள் இருவருக்கும் தலா ரூ. 2ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்கள் இருவருக்கும் உதவி செய்ததாக 3 வனத்துறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டதில் சூரி மற்றும் விமல் உட்பட உடன் சென்ற கூட்டாளிகள் அனைவரும் இ- பாஸ் வாங்காமலேயே கொடைக்கானலுக்கு சென்று இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதன் பின்னர் தான் அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து அபராதம் விதித்ததாக போலீசர் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News