Categories: Cinema News latest news

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு சூர்யா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?…

வசந்த் இயக்கிய நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சூர்யா. அதன்பின் பல படங்களில் சாக்லெட் பாயாகவே நடித்தார்.

பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா, பிதா மகன் ஆகிய படங்கள் மூலம் சிறந்த நடிகராக மாறினார். பின்னர் பின்னர் வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.இவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் இவருக்கு தேசிய அளவில் நல்ல இமேஜை பெற்று தந்தது.

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இவர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க, பல வெற்றிப்படங்களை கொடுத்த பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் சூர்யா ரூ.35 கோடி சம்பளம் பெற்றது தெரியவந்துள்ளது. ரஜினி, அஜித், விஜய்க்கு பின் அதிக சம்பளம் வாங்கும் இடத்தில் சூர்யா இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா