Categories: Cinema News latest news

சூர்யாவின் சூப்பரான தண்டனை.. இதுவரை செய்யாததை எல்லாம் செய்யும் இயக்குனர் பாலா.?

சூர்யா காட்டில் தற்போது அடைமழை தான். அவரது அடுத்ததடுத்த படங்கள் நல்ல வெற்றியை பதிவு செய்து வருகின்றன. அதே போல அவர் கௌரவ தோற்றத்தில் நடித்து வந்தாலும் அந்த படம் அவருக்காகவே மிக பெரிய வெற்றியை பதிவு செய்து வருகிறது.

அதே கொண்டாட்டத்தோடு சூர்யா தனது 41வது திரைப்படத்தை தானே தயாரித்து இயக்க கிளம்பினார். அந்த படத்தை இயக்கும் வாய்ப்பை தன்னை நடிப்பில் தேற்றியதில் முக்கிய பங்காற்றிய இயக்குனர் பாலா அவர்களின் கொடுத்தார். அவரும் தான் ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என கடுமையாக உழைத்ததாக கூறப்பட்டது.

ஆனால், கன்னியாகுமரி ஷூட்டிங்கில் இயக்குனர் பாலா வழக்கம் போல தனது பழைய பாணியில் நடந்துகொண்டதாக கூறப்பட்டது. சில சம்பவங்கள் நடைபெற்றதால் சூர்யா அந்த ஷூட்டிங்கை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் சென்னை வந்துவிட்டார் என கூறப்பட்டது.

இரண்டாம் கட்ட ஷூட்டிங் என்ன ஆனது என்றே இன்னும் தெரியவில்லை. கோவாவில் நடைபெற இருந்த இரண்டாம் கட்ட ஷூட்டிங் தற்போது பாண்டிச்சேரியில் பிளான் செய்யப்பட்டு வருகிறதாம்.

இதையும் படியுங்களேன் – நினைத்து பார்க்க முடியாத லாபம்.. வசூல் மழையில் தயாரிப்பாளர் கமல்.. 25 நாள் மொத்த விவரம் இதோ…

சூர்யா கொடுத்த இந்த இடைவெளியில் இயக்குனர் பாலாவிடம் நிறைய மாற்றங்கள் தெரிகிறதாம். அதன் படி, இயக்குனர் பாலா தற்போது முதலில் இதுதான் கதை, இது தான் நடக்க போகுது சீன் எழுதி வையுங்கள் என உதவி இயக்குனர்களிடம் கூறுவார்களாம்.

ஆனால், தற்போதெல்லம் அவரே நேரடியாக திரைக்கதை எழுதுகிறாராம். எல்லாம் சூர்யா கொடுத்த இடைவெளி தானா ? இல்லை தமிழ் சினிமா கொடுத்த இடைவெளியா என்பது தெரியவில்லை.

Manikandan
Published by
Manikandan