Categories: Cinema News latest news

அதெல்லாம் அவங்களுக்கே கொடுத்திருங்க.! சூர்யா சார்.., கடவுள் சார் நீங்க.! நெகிழ்ச்சி சம்பவம்..,

சூர்யா தற்போது தனது 41வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பாலா இயக்கி வருகிறார். இதற்கு முன் இயக்கிய சில படங்கள் அவருக்கு தோல்வி யுற்ற காரணத்தால், இந்த படத்தை எப்படியும் ஹிட்டாக கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் பாலா கடுமையாக உழைத்து வருகிறார்.

 

இப்படத்தில் சூர்யா மீனவராக நடிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுடன் தெலுங்கு சென்சேஷனல் நடிகை கீர்த்தி ஷெட்டி, மலையாளத்தில் இருந்து மமிதா பாஜூ ஆகியோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் கன்னியாகுமரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

 

கன்னியாகுமரியில் இப்போது ஷூட்டிங்கிற்காக சூர்யா தங்கியிருப்பது போல சின்ன சின்ன வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றை  சூட்டிங் முடிந்த பிறகு அந்த வீடுகளை வீடு இல்லாத ஏழைகளுக்கு அதை அப்படியே கொடுத்து விடுங்கள் என்று சூர்யா கூறிவிட்டாராம்.

இதையும் படியுங்களேன் – இளையராஜாவை அசிங்க அசிங்கமாக திட்டி வரும் நெட்டிசன்கள்.! காரணம் இதுதானா.?!

இதேபோல ஜெய்பீம்  பட ஷூட்டிங்கின் போதும் புதிதாக கட்டப்பட்ட வீடுகளை, அந்த இருளர் சமூகத்தில் வீடில்லாது இருப்பவர்களுக்கு கொடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டாராம் சூர்யா.

மேற்கண்ட இரண்டு திரைப்படங்களுக்கும் தயாரிப்பாளர் சூர்யா தான்.  சூட்டிங்கிற்காக போடப்பட்ட வீடுகளை வீடில்லாத மக்களுக்கே கொடுத்து விடுங்கள் என்று கூறும் மனதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan