அன்பான ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் சொன்ன 'சூர்யா 47' படக்குழு... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

 
Suriya 47

பொதுவாக ஹீரோக்கள் நார்மலாக நடிக்கும் படங்களை விட, அவர்கள் போலீஸ் ரோலில் நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அப்படி தான் 'சூர்யா 47' படத்துக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது

சூர்யாவை நாம் 'காக்க காக்க, சிங்கம் 1, 2, 3' போன்ற படங்களில் போலீஸ் ஆக பார்த்திருந்தாலும், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் இந்த படத்தில் அவரை எந்த மாதிரி லுக்கில் காட்டப்போகிறார்கள் என்று வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டும்.

அதற்கு முன்பு இதன் ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக இன்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'ழகரம் ஸ்டுடியோஸ்' எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவையும் ரிலீஸ் செய்துள்ளனர்.

இதில் 'The One' சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா வலம் வரப்போகிறார். விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web