பிரேமலு ஹீரோவுக்கு பிறந்தநாள்!.. சூர்யா 47 படக்குழு கொடுத்த செம சர்ப்ரைஸ்!..

 
nazlen

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சூர்யா 47' திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இப்படத்தில் நடித்துள்ள நஸ்லினின் பிறந்தநாளை முன்னிட்டு படகுழு வெளியிடப்பட்ட புதிய புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வரு

'ஆவேசம்' மற்றும் 'ரோமஞ்சம்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கும் இந்த திரைப்படம், அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த போலீஸ் புலனாய்வுத் திரைப்படமாக உருவாகி வருகிறது.

நடிகர் சூர்யா ஒரு முக்கிய வழக்கில் துப்பு துலக்கத் தவறியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் அவர், தனது திறமையற்ற அணியுடன் கேரளாவுக்குச் செல்கிறார். அங்கு எதிர்பாராத விதமாக ஒரு புதிய குற்ற வழக்கை சந்திக்கும் அவர், அதை எவ்வாறு கையாள்கிறார் என்பதே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.

ஜித்து மாதவன் இயக்கும் இந்த திரைப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கதாநாயகியாக நஸ்ரியா நஜீம் நடித்துவரும் நிலையில், 'பிரேமலு' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நஸ்லினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்கும் இந்த திரைப்படம், தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சூர்யா மற்றும் ஜித்து மாதவன் கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் மலையாள நடிகர் நஸ்லினின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சிறப்பு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் நஸ்லினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags

From Around the web