Categories: Cinema News latest news

வேலையை காட்ட தொடங்கிய பாலா.! உச்சகட்ட அச்சத்தில் சூர்யா ரசிகர்கள்.!

இயக்குனர் பாலா என்றாலே அழகான நடிகர்கள் கூட அழுக்காக தான் இருப்பார்கள், அவர்கள் வாழ்வு முறை நாம் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டோம் அந்த மாதிரி இருக்கும். அவருடைய  கதைக்களம் யாரும் எதிர்பார்க்கத ஒன்றாக அமையும்.

அவர் இயக்கத்தில் வெளியான சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என பெரும்பாலான படங்கள் இந்திய அளவில் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்திருந்தது. கடைசியாக வெளியான படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை.

அதனால் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட்படத்தை கொடுத்து மீண்டும் நல்ல இயக்குனராக வரவேண்டும் என பாலா கடுமையாக உழைத்து, ஒரு படக்கதையை உருவாக்கி, அதனை சூர்யாவிடம் கூறி, ஒப்புதல் வாங்கிவிட்டார். அதில் சூர்யாவே நடித்து, தயாரிக்கவும் உள்ளார். ஒரு மாதத்தில் இப்பட ஷூட்டிங் முடிய உள்ளது.

இதையும் படியுங்களேன் – என் பொண்டாட்டிய பத்தி இனிமே பேசுவியா.?! மேடையேறி அறைந்த நடிகர்.!

இப்படத்திற்கான செட் கன்னியாகுமரியில் போடப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு கடைசியாக வெளியான சூரரை போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மீண்டும் சூர்யா நல்ல மார்க்கெட் நிலவரத்தில் உள்ளார்.

இந்த சமயத்தில் பாலா படத்தில் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார் சூர்யா என்கிற செய்தி பரவி வருகிறது. பாலா கடைசியாக எடுத்த படங்கள் சரியாக போகவில்லை. அதன் காரணமாக கூட  சூர்யா ரசிகர்கள் தற்போது கலகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் ஹிட்டாக வேண்டும் அப்போது தான் வாடிவாசலுக்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan