Categories: Cinema News latest news

கடுப்பான சூர்யா.. 25 லட்சம் டோட்டல் குளோஸ்.. பாலா செஞ்ச காரியத்தை பாருங்க…

2003ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே கன்னியாகுமரியில் முழுவீச்சாக நடைபெற்று வந்தது. இப்படத்தை சூர்யா தனது பட நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் கன்னியாகுமரி ஷூட்டிங்கின்போது சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதன் காரணமாகத்தான் சூட்டிங் முழுதாக முடிக்காமல் சூர்யா சென்னை கிளம்பி விட்டார் என்ற தகவல்கள் பரவி வந்தன.

இருந்தாலும் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம், சூர்யா ஒரு புகைப்படத்தை பதிவிட்டு மீண்டும் ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளது என்பது போல குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது எதற்காக சூர்யா அங்கிருந்து கிளம்பி வந்தார், கன்னியாகுமரியிலிருந்து சென்னை வந்தார், என்ற காரணம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது சூட்டிங் ஒரு சில வீடுகள் இருக்கும் பகுதி  போல ஒரு இடம் தேவைப்படுகிறது, அதனால் பல்வேறு வீடுகள் இருக்கும் ஓர் ஏரியா போல ஒன்றை தயார் செய்து விட்டனர்.

இதையும் படியுங்களேன் – ஆண்டவரின் அதிரடி நகர்வு.. மீண்டும் பஞ்சாயத்தில் இந்தியன்-2.! காரணம் விஜய் சேதுபதி.!

ஆனால், இறுதிவரை அந்த வீட்டில் ஒரு காட்சி கூட வைக்கவில்லையாம்.  இதனை கவனித்த சூர்யா 25 லட்சம் செலவு செய்து ஒரு வீட்டை தயார் செய்தால், அதில் ஒரு காட்சி கூட வைக்காமல் பாலா இப்படி செய்து விட்டாரே என்று வருத்தப்பட்டாராம். சூர்யா சென்னைக்கு வந்ததற்கும் அடுத்த ஷெட்யூல் ஆரம்பிக்காமல் இருப்பதற்கும் இதுவும் ஒரு காரணம் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan