ஆர்ஜே பாலாஜியை அந்த கடி கடிச்ச சூர்யா ரசிகர்கள்!.. இப்போ மூஞ்சியை எங்கே கொண்டு போய் வச்சிப்பாங்க!..

 
rjb

'கருப்பு' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும் பரவி வந்தன. 

குறிப்பாக, படத்தின் வெற்றிக்குப் பிறகு படக்குழுவில் சிலருக்கு சூர்யா சொகுசு கார்கள் பரிசாக வழங்கிய நிலையில், ஆனால், "படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஏன் கார் வழங்கப்படவில்லை?" என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்தது. சிலர் இதையே காரணமாகக் கொண்டு இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.

இந்த சூழலில், அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆர்.ஜே.பாலாஜி தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சூர்யா கார் ஓட்டிக் கொண்டிருக்க, அருகில் அமர்ந்துள்ள ஆர்.ஜே.பாலாஜி அவருக்கு வழிகாட்டுவதும், இருவரும் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டு பயணம் செய்வதும் பதிவாகியுள்ளது.


இந்த வீடியோவுடன், “இதுதான் நாங்க” என்று சுருக்கமாக பதிவிட்டிருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. இந்த ஒரு வரியும், அதனுடன் வெளியான காட்சிகளும் கடந்த சில நாட்களாக பரவி வந்த விமர்சனங்களுக்கு நேரடியான பதிலாக பார்க்கப்படுகின்றன. 

இதற்கிடையில், 'கருப்பு' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. உலகளவில் 340 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியுள்ள 'கருப்பு', ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

எனினும், தற்போது ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ சூர்யா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இடையேயான நட்பு மற்றும் புரிதல் வழக்கம்போலவே தொடர்கிறது என்பதை இந்த வீடியோ வெளிப்படையாக காட்டியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

From Around the web