Categories: Cinema News latest news

பாலாவை அடுத்து வெற்றிமாறன்.. வாடிவாசலில் இருந்து வெளியேறும் சூர்யா??

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சூர்யா, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான “சூரரை போற்று”, “ஜெய் பீம்” போன்ற திரைப்படங்கள் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. குறிப்பாக “சூரரை போற்று” திரைப்படம் 5 தேசிய விருதுகளை குவித்தது.

இந்த நிலையில் சூர்யா, பாலா இயக்கி வந்த “வணங்கான்” திரைப்படத்தில் நடித்து வந்தார். இடைப்பட்ட காலத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

Vanangaan

ஆனால் அந்த செய்திகள் எல்லாம் உண்மையல்ல என்று படக்குழுவினர் கூறினார்கள். மேலும் “வணங்கான்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யாவும் பாலாவும் இடம்பெற்ற ஒரு புகைப்படமும் வெளியானது. அதனை தொடர்ந்து “வணங்கான்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவந்தது.

எனினும் சில நாட்களுக்கு முன்பு சில காரணங்களால் சூர்யா “வணங்கான்” திரைப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சூர்யா வெளியேறியதன் காரணம் குறித்து பல தகவல்கள் இணையத்தில் வலம் வந்தன.

குறிப்பாக சூர்யாவை ஒரு காட்சிக்காக 9 நாட்கள் தொடர்ந்து பாலா ஓடவிட்டார் என்றெல்லாம் கூறினார்கள். எனினும் “வணங்கான்” திரைப்படத்தில் இனி சூர்யா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த செய்தியால் சூர்யா ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளதை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வனை ஓவர் டேக் செய்து சாதனை படைத்த தளபதி விஜய்… தொடங்கியது வாரிசு MODE…

Vaadivaasal

அதாவது வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த “வாடிவாசல்” திரைப்படத்தின் மீது சூர்யாவுக்கு நம்பிக்கை இல்லையாம். படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? போன்ற குழப்பத்தில் சூர்யா இருக்கிறாராம்.

வெற்றி மாறன் வழங்கிய “பேட்டை காளி” வெப் சீரீஸ் “வாடிவாசல்” போன்ற கதையம்சத்தில் இருந்ததால் சூர்யாவுக்கு சிறு நெருடல் ஏற்பட்டுவிட்டதாம். ஆதலால் “வாடிவாசல்” கதையே வேண்டாம் என சூர்யா முடிவெடுத்துள்ளாராம். மேலும் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளாராம். இத்தகவலை வலைப்பேச்சு அந்தணன் தனது வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Arun Prasad
Published by
Arun Prasad