விஜய்யின் ஜன நாயகனால் சூர்யா தனது 47-வது படம் குறித்து எடுத்த அதிரடி முடிவு!

 
Vijay Jana Nayagan Suriya 47

'கருப்பு' ஹிட்டிற்கு பிறகு சூர்யா நடிப்பில் 'விஸ்வநாத் & சன்ஸ்', இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் 'சூர்யா 47', த.செ.ஞானவேல் இயக்கும் 'சூர்யா 48' என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் சூர்யா தனது 47-வது படத்தில் போலீஸ் ரோலில் நடிக்கிறார். அவருடன் டூயட் பாடி ஆடி வருகிறார் மலையாள நடிகை நஸ்ரியா.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸுக்காக சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சூர்யாவின் பிறந்தநாள் வருகிற ஜூலை 23-ஆம் தேதி என்பதால், அன்றே போஸ்டரை ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழு ப்ளான் போட்டிருந்தது.

ஆனால், அதே தேதியில் தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான விஜய் நடித்திருக்கும் கடைசி படமான 'ஜன நாயகன்' திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போவதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இதனால் இப்போது சூர்யா தனது 47-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை 'ஜன நாயகன்' படம் ரிலீஸாகும் நாளில் வெளியிட்டால் ரீச் இருக்காது, ஆகையால் அதுக்கு வேறு ஒரு நல்ல நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டாராம்.

From Around the web