Categories: Cinema News latest news throwback stories

அந்த இடத்தில் சூர்யாவுக்கு ஏற்பட்ட அவமானம்.! பொதுமேடையில் கலங்கி நின்ற சிவகுமார்.!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பாலும், சிறப்பான கதை தேர்வின் மூலமும், நல்ல நடிகராக வளர்ந்து நிற்கிறார் சூர்யா. ஒவ்வொரு படத்திற்கும் அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதனை கட்சிதமாக செய்து வருவதால், நடிப்பின் நாயகன் என ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.

இவர் புகழ்பெற்ற நடிகர் சிவகுமாரின் பையனாக இருந்தாலும், நடிப்பை விட்டு ஒதுங்கி, டிகிரி முடித்து கார்மெண்ட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இது பற்றி அண்மையில் அவரது தந்தை சிவகுமார் மிகவும் நெகிழ்ச்சியாக கூறினார்.

சிவகுமார், தனது மகனுக்காக கல்லூரியில் சீட் கேட்க செல்கையில், பலரும் கிண்டல் செய்துள்ளனர். இதுவரை, நடிகரின் பையன்கள் யாரும் டிகிரி முடித்ததில்லை.  சிவாஜி பயன் பிரபு டிகிரி முடிக்கவில்லை. இதே போல அடுக்கிக்கொண்டே சென்றுள்ளனர். இல்லை என் மகன் படிப்பான் என கூறி, சீட் வாங்கி வந்துள்ளார் சிவகுமார்.

இதையும் படியுங்களேன் – விஜய் vs அஜித்.! இதெல்லாம் சொல்லி வச்சி பண்றாங்களா.? புகைப்படங்களால் குழப்பத்தில் ரசிகர்கள்..,

அவர்கள் சொன்னது போலவே வருடங்கள் கூட, அரியர்களும் அதிகமானது. இதனை பார்த்த சிவகுமார், சூர்யாவிடம், நீ என்ன பண்ணுவியோ தெரியாது. டிகிரி வேணும் என கூறியுள்ளார். உடனே, சரி என இறுதியாண்டில் கடுமையாக படித்து, டிகிரி முடித்து கார்மெண்ட்ஸ் தொழிற்சாலையில் வேலைக்கு சென்றுவிட்டார் சூர்யா.

இதனை பெருமை பொங்க நெகிழ்ச்சியோடு சூர்யா தந்தை சிவகுமார் கூறினார். தற்போது சினிமாவிலும் அதே பொறுப்போடு, சூர்யா செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan
Published by
Manikandan