Connect with us

Cinema News

தனது சம்பளத்தை அப்படியே திருப்பதி உண்டியலில் செலுத்திய சூர்யா.! பின்னணியில் பல சுவாரஸ்யங்கள்..,

தற்போது உள்ள தமிழ் சினிமா மார்க்கெட்டில், உச்சத்தில் இருக்கும் விஜய், அஜித்திற்கு அடுத்தபடியாக இருக்கும் நடிகர் என்றால் அது சூர்யா தான். அயன், சிங்கம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் விஜய் அஜித்தையே மிஞ்சிவிட்டார் என்றே கூற வேண்டும். அதன் பிறகு சரியான வெற்றி கிடைக்காமல்,

தற்போது மீண்டும், சூரரை போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் என ஹிட் கொடுத்து மீண்டும் தான் ஹிட் நாயகன் என நிரூபித்து வருகிறார் சூர்யா. நடிப்பின் நாயகன் என ரசிகர்கள் அன்போடு அழைக்கும் அளவுக்கு சூர்யாவின் நடிப்பு வளர்ந்து நிற்கிறது என்பதே உண்மை.

ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் மற்ற ஹீரோ நடிக்க மறுத்த திரைப்படங்கள் தான் சூர்யாவுக்கு கிடைக்கும். அதிலும் சுமாராக தான் நடித்து இருப்பார். அந்த இயக்குனர்கள் திறமையானவர்களாக இருந்ததால் அந்த திரைப்படங்கள் ஹிட்டாகி விடும். பாலாவின் நந்தா திரைப்படத்திற்கு பிறகு தான் உண்மையில் சூர்யாவின் நடிப்பு மேம்பட்டது என்றே கூறவேண்டும் .

இதையும் படியுங்களேன் – நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ.! நான் அந்த விஷயத்தில் தலையிட மாட்டேன்.! ஒதுங்கிவிட்ட கமல்.!?

அந்த சமயம் ஒரு பெரிய ஹிட்டுக்காக காத்திருந்த சூர்யாவுக்கு உன்னை நினைத்து திரைப்படம் ஹிட் படமாக அமைந்தது. அந்த படம் ஹிட்டாகி விட்டால் அதற்காக வாங்கிய சம்பளத்தை திருப்பதி கோவில் உண்டியலில் செலுத்துவதாக வேண்டியிருந்தாராம் சூர்யா.

அப்படியே படம் ஹிட்டாகவே, தனது சம்பளத்தை அப்படியே திருப்பதி உண்டியலில் செலுத்தி விட்டு வந்துள்ளாராம். இதனை உன்னை நினைத்து பட இயக்குனர் விக்ரமன் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top