×

லட்ச ரூபா செலவு பண்ணிட்டேன்... படத்த ரிலீஸ் பண்ணுங்க...என் அம்மா கொண்ணுடுவாங்க!...

 

இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. அதன்பின் சூர்யாவை வைத்து ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தை சூர்யா தனது சொந்த பட நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்தார். ஆனால், படம் தயாராகி வெளியாகும் நிலையில் கொரோனா ஊரடங்கால் பட வெளியீடு தள்ளிப்போனது.

6 மாதங்கள் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், இப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிடுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா அறிவித்தார். அதன்படி இம்மாதம் 30ம் தேதி அப்படம் அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவித்திருந்தார். ஆனால், விமானப்படையின் என்.ஓ.சி கிடைக்காததால் மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போனது. அதன்பின் என்.ஓ.சி கிடைத்து படம் நவம்பர் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சூர்யா ரசிகர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ ஒரு லட்சம் செலவு செய்து டிவி மற்றும் ஹோம் தியேட்டரை வாங்கியுள்லேன். எனவே, சூரரைப்போற்று படத்தை கூறிய தேதியில் ரிலீஸ் பண்ணிடுங்க.. இல்லனா என் என் அம்மா என்னை பொளந்திடும்’ என அமேசான் பிரமைக்கு கோரிக்கை வைத்து டிவிட் செய்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News