Categories: Cinema News latest news

ரசிகர்களிடம் பாரபட்சம் பார்க்கிறாரா சூர்யா.?! அப்போ மத்தவங்க எல்லாம் பாவம் இல்லையா.?!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக காத்திருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படம் அடுத்த வாரம் மார்ச் 10ஆம் தேதி  திரைக்கு வர உள்ளது.  பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். கிராமத்து பின்னணியில், ஆக்சன்  , கமர்சியல் திரைப்படமாக இந்த திரைப்படம் தயாராகியுள்ளது.

இப்படத்தில்  இருந்து ஏற்கனவே பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் ட்ரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை எதிர்பாத்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்களேன் –  தனுஷின் கோபத்திற்கு காரணம் இதுதானா.?! அப்டியேவா காப்பி அடிப்பீங்க.?! பதறிப்போன படக்குழு.!

இதற்காக தமிழகம் முழுவதும் முக்கிய ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். முக்கிய நிர்வகிகளை அழைத்து,  அவர்களை சென்னையில் வைத்து ட்ரைலர் வெளியீட்டு விழாவை நடத்த உள்ளாராம் சூர்யா.

முக்கிய நிர்வாகிகளை மட்டும் அழைத்ததற்கு மற்ற ரசிகர்களையும் மொத்தமாக அழைத்து  பிரமாண்டமாக விழா எடுத்து ட்ரைலரை வெளியிடலாமே என மற்ற ரசிகர்கள் கூறிவருகின்றனர். எது எப்படியோ நாளை தான் என்ன விழா நடக்கிறது. எப்படி நடக்கிறது என்பது நமக்கே தெரிய வரும்.

இப்படத்தில் ப்ரியங்கா மோகன், சத்யராஜ், வினய் என பலர் நடித்து உள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து உள்ளது.

Manikandan
Published by
Manikandan