Categories: Cinema News latest news

லியோவில் லோகேஷ் பண்ண பெரிய தப்பே இதுதான்!.. அந்த ரோலக்ஸை மட்டும் இறக்கியிருந்தா?.

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி தான் எப்படிப்பட்ட ஒரு ஆக்சன் டைரக்டர் என்பதை நிரூபித்து இருந்தார். கைதி படத்தை தொடர்ந்து அதே போல மாஸ்டர் படமும் இருக்கும் என நினைத்து லோகேஷுக்கு விஜய் வாய்ப்பு கொடுத்திருந்தார்.

மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் வித்யாசமா காட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தார் லோகேஷ் கனகராஜ். நடிகர் விஜயை விட விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. ஆனால் மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.

இதையும் படிங்க: ரஜினிகாந்தோட அந்த மெகா ஹிட் பாட்டு!.. லியோவில் வச்சு மாஸ் பண்ண லோகி.. விஜய் ரசிகர்கள் அப்செட்?..

மாஸ்டர் படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் சந்தனம் கதாபாத்திரம், பகத் பாசில் நடித்த அமர் கதாபாத்திரம் படம் முழுக்க மிரட்டி இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரம் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் டபுள் மடங்காக்கியது.

இந்நிலையில், லியோ திரைப்படம் எல்.சி. யூ என்பதை அறிந்தவுடன் ரோலக்ஸ் ரெஃபரன்ஸ் இருக்கும் எனது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், டில்லி மற்றும் ஏஜென்ட் விக்ரம் ரெபரன்ஸ் மட்டுமே லியோவில் இடம் பெற்றிருந்தது.

இதையும் படிங்க: அடேங்கப்பா!.. லியோ படத்தை முதல் நாளே தியேட்டரில் பார்த்த சூப்பர்ஸ்டார்?.. உண்மை என்ன?..

கடைசி கிளைமாக்ஸில் ஆவது லியோ விஜய்க்கு ரோலக்ஸ் உதவி செய்வது போன்ற ஒரு சீன் வைத்திருந்தால் கூட திரை தீப்பிடித்து இருக்கும் என்றும் நண்பர்களாக லியோவுக்கு ரோலக்ஸ் உதவி செய்வதும், கடைசியில் ரோலக்ஸ் எதிரியாக மாற அவரையே எதிர்க்கும் நிலைக்கு லியோ தள்ளப்பட்டால் நல்லா இருந்திருக்கும் என லோகேஷுக்கு சூர்யா ரசிகர்கள் கதை சொல்லிக் கொடுத்து வருகின்றனர்.

Saranya M
Published by
Saranya M