அப்பாடா விஜய் சிஎம் ஆகிட்டாரு!.. சந்தோஷத்தில் சூர்யா ரசிகர்கள்.. ‘கருப்பு’ களைகட்டும்!..

 
அப்பாடா விஜய் சிஎம் ஆகிட்டாரு!.. சந்தோஷத்தில் சூர்யா ரசிகர்கள்.. ‘கருப்பு’ களைகட்டும்!..

விஜய் நாளை முதலமைச்சர் ஆகப்போவதை எண்ணி ரொம்பவே சந்தோஷத்தில் இருப்பது விஜய் ரசிகர்களை விட சூர்யா ரசிகர்கள் தான் என்றே சொல்லலாம். ஆர்ஜே பாலாஜியே அடுத்த நொடி ஹேப்பியாக புதிய போஸ்டரை வெளியிட்டு சொன்னதை போலவே மே 14 கருப்பு வெளியாகிறது என்பதை அறிவித்துள்ளார்.

சூர்யாவின் கருப்பு படத்தின் டிரைலர் வெளியாகாமல் இருக்க காரணமே விஜய் சிஎம் ஆக முடியாமல் நிலவி வந்த அரசியல் சூழ்நிலை தான் என ஆர்ஜே பாலாஜி நேற்று வீடியோ வெளியிட்டு இருந்தார்.

திமுகவிடம் இருந்த கூட்டணி கட்சிகள் இன்று ஆதரவு அளித்த நிலையில், விஜய் நாளை முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் அரசியல் செய்திகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இன்று வெளியான 26 படம் ஆள் இல்லாமல் பல தியேட்டர்களில் காலையில் ஷோக்கள் கூட ரத்தானது. இதே நிலைமை அடுத்த வாரமும் ஏற்படுமா என சூர்யா ரசிகர்கள் அஞ்சிய நிலையில், தற்போது அனைத்து பஞ்சாயத்தும் தீர்ந்து விட்டது.

நாளை கருப்பு டிரைலரை இறக்கி புரமோஷனை முடுக்கி விட்டால், அடுத்த வாரம் தியேட்டர்கள் திருவிழா கோலம் காணும் என்கின்றனர். இந்த முறை வன்மம் இல்லாமல் விஜய் ரசிகர்களே சூர்யாவின் கருப்பு படத்தை வெற்றிப் பெற வைப்போம் என்றும் கூறி வருகின்றனர். ஆர்ஜே பாலாஜி சொதப்பாமல் இருந்தால் படம் செம ஹிட் ஆகிவிடும். த்ரிஷா ஹீரோயின் என்பதால் கூடுதலாக படத்திற்கு பலம் சேர்ந்துள்ளது.

From Around the web