விஜய் இனிமே பாடமாட்டார்!.. சூர்யாவோட பாட்டை கேட்க ரெடியா!.. ஜி.வி. பிரகாஷ் குமார் செம அப்டேட்!..

 
ken

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் 'விஷ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட இப்படத்தைப் பற்றிய புதிய தகவல் ஒன்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 'விஷ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் இருமொழிப் படமாக தயாராகியுள்ளது. குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 14, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் சஞ்சய் விஷ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ மற்றும் பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் சிறப்பம்சமாகும்.

அதன்படி, 'விஷ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் சூர்யாவே பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்தப் பாடலின் வரிகளை தனது முதல் படத்திலேயே ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த நடிகர் கருணாஷின் மகன் கென் கருணாஷ் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா ஏற்கனவே சில திரைப்படங்களில் தனது குரலில் பாடல்களைப் பாடி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்தப் புதிய பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்தப் பாடலின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Tags

From Around the web