Categories: Cinema News latest news

கைவசம் நிறைய தொழில் வச்சிருக்கீங்களே சார்.? சூர்யாவின் புது புது பிசினஸ் சீக்ரெட் லிஸ்ட் இதோ….

நடிகர் சூர்யா தற்போது தனது நடிப்பு தயாரிப்பு என பட்டைய கிளப்பி வருகிறார்.  அவர் நடிப்பில் அடுத்ததாக பாலா இயக்கத்தில் வணங்கான் , சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் என நடித்து வருகிறார்.

அதே போல, தனது தயாரிப்பில் அண்மையில் தயாரித்த விருமன் திரைப்படம் விமர்சக ரீதியில் தோல்வியடைந்தாலும், வசூலில் நல்ல வெற்றியை பெற்றது.  சூர்யா தயாரிப்பில் மட்டுமல்லாமல், மேலும் சில துறைகளிலும் முதலீடு செய்து வருகிறார்.

ஏற்கனவே, சினிமா வட்டாரத்தில் சூர்யா மும்பையில் முதலீடு செய்து வருகிறார். அதன் மூலமே அவருக்கு மாதம் சுமார் 20 கோடி வருமானம் வருகிறது. அதனை பார்த்து கார்த்தியும் முதலீடு செய்து வருகிறார் என்று தகவல் வெளியாகி இருந்தது.

இதையும் படியுங்களேன் – நன்றாக நடிக்க தெரிந்தும் சினிமாவில் ஜொலிக்காத நட்சத்திரங்கள்…லிஸ்ட் இதோ…

தற்போது அதே போல, தமிழகத்தில் உள்ள  சென்னை, கோவை , திருச்சி போன்ற விமான நிலையங்களில் பார்க்கிங் கான்டிராக்ட்டை சூர்யாவின் நிறுவனம் தான் டெண்டர் எடுத்துள்ளதாம். அதனாலும் நல்ல வருமானம் சூர்யாவுக்கு கிடைக்கும் அண்மையில் வலைப்பேச்சு பத்திரிகையாளர்கள் தங்களது வீடியோவில் தெரிவித்து உள்ளனர்.

Manikandan
Published by
Manikandan