#image_title
கங்குவா திரைப்படத்தின் ப்ரமோஷன்களில் நடிகர் சூர்யா ஓவர் கான்ஃபிடன்ஸ் உடன் பேசி வருவதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
கங்குவா : தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா. இப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
பீரியட் படம்: 700 வருடங்களுக்கு முன்பு நடந்த கதையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார் இயக்குனர் சிறுத்தை சிவா. மேலும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி நடித்து இருக்கின்றார். மேலும் நடிகர் பாபி தியோல் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: Sivakarthikieyan: இனிமே வேற லெவல்தான்!.. எஸ்.கே-வின் லைன் அப்பில் இருக்கும் மாஸ் படங்கள்!..
நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இரண்டு பாகங்களாக எடுத்து வைத்திருக்கின்றார். இதில் முதல் பாகம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாவதற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய பொருட்ச அளவில் எடுக்கப்பட்டுள்ளது.
1000 கோடி வசூல்: சூர்யாவின் கெரியவில்லையே அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் கங்குவா. மேலும் இப்படத்தை 30க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் வெளியான படங்களிலேயே 1000 கோடி வசூல் செய்த திரைப்படமாக இப்படம் அமையும் என்று பட குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
பட ப்ரோமோஷன்: கடந்த இரண்டு வாரங்களாக இப்படம் தொடர்பான ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் நடிகர் சூர்யா இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று படம் குறித்து ஓவர் ஹைப் ஏத்தி கொண்டு இருக்கின்றார். சமீப நாட்களாக படம் தொடர்பாக அவர் கூறும் வார்த்தைகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.
ஓவர் பில்டப்: இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் இருக்கும் அனைவரும் வாயை பிளந்து பார்க்கும் அளவிற்கு இருக்கும் என்றும், படம் தீயாக இருக்கப் போகிறது என்றும், அனைத்து கிரியேட்டர்களும், அனைத்து டைரக்டர்களும் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த திரைப்படம் இருக்கும் என்று பில்டப் மேல் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கின்றார் நடிகர் சூர்யா.
இதையும் படிங்க: Ajith: நேருக்கு நேரா மோதணும்னா எதிரியும் வலுவா இருக்கணும்… எப்படி இருக்கு அஜீத் ஸ்டைல்?
லிங்குசாமியின் மைண்ட் வாய்ஸ்: இதையெல்லாம் பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் அஞ்சான் திரைப்படத்துடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்து வருகிறார்கள். இயக்குனர் லிங்குசாமியின் மைண்ட் வாய்ஸ் என்று கூறி சில ட்ரோல்களை வெளியிட்டு வருகிறார்கள். எது எப்படியோ சூர்யாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா படம் மிகச்சிறந்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தால் அது தமிழ் சினிமாவிற்கு நல்லது தான் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…