ஹாரிஷ் ஜெயராஜ் அப்படி செய்ய சூர்யா தான் காரணமா?.. விஜய்க்கு எதிராக நடந்த சதியா?..

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் விஜய் படத்துக்கு தன்னால் பாட்டு போட முடியவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் ஹாரிஸ் ஜெயராஜ் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை எழுப்பி உள்ளது. முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தும் ஹாரிஸ் ஜெயராஜ் ஏன் மறுத்தார் என்கிற கேள்வியை நோக்கி ஆராய்ந்த விஜய் ரசிகர்கள் அதற்கு சூர்யா தான் காரணம் என்று சண்டையை ஸ்டார்ட் பண்ணி விட்டனர்.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் விஜய் அஜித்தை முந்துவதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார் என்றும் விஜய் படங்களை ஹாரிஸ் ஜெயராஜ் வேண்டாம் என ஒதுக்கிய நேரங்களில் எல்லாம் சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை அவர் கொடுத்து வந்ததை குறிப்பிட்டு விஜய்க்கு எதிரான சதியை சூர்யாவும் அவரது குடும்பமும் பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர் என்கின்றனர்.
ஆனாலும் பெரிதாக சூர்யாவால் வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் திணறினார் என்பதுதான் உண்மை என விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அடுத்த சண்டையை ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வில்லை என்றாலும் விஜய்யின் படங்கள் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சூர்யாவை நம்பி தொடர்ந்து அவர் படங்களுக்கு இசையமைத்து வந்த ஹாரிஸ் ஜெயராஜ் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார் என தளபதி ரசிகர்கள் ட்விட்டர் சண்டையை கிளப்பியுள்ளனர். தற்போது சூர்யாவே ஹரிஷ் ஜெயராஜுக்கு பட வாய்ப்புகளை கொடுக்காமல் ஒதுக்கி வைத்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசையமைக்க முடியாத காரணத்திற்காகவே தான் 10 வருடங்கள் விஜய் படங்களுக்கு இசையமைக்க முடியாமல் கடைசியாக நண்பன் படத்துக்கு மட்டும் இசையமைத்தேன் என்று ஹாரிஸ் ஜெயராஜ் தனது பேட்டியில் கூறிய நிலையில், இந்த விவாதம் எழுந்துள்ளது.