ஒரே வீடியோ.. விஜய் – அஜித்தின் சாதனையை அசால்ட்டாக முறியடித்த சூர்யா!
சமூக வலைதளங்களில் ஒரு சாதனை படைக்கப்பட்டால், அதை முறியடிக்க அடுத்தடுத்து பெரிய சம்பவங்கள் நடப்பது வழக்கம். ஆனால், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் இரு பெரும் தூண்களாகக் கருதப்படும் விஜய் மற்றும் அஜித்தின் பிரம்மாண்ட சாதனையை, நடிகர் சூர்யாவின் ஒற்றை வீடியோ சில மணி நேரங்களிலேயே ஓவர்டேக் செய்து இணையத்தை அதிர வைத்துள்ளது.
அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றிருந்த தமிழக முதல்வர் விஜய், அங்கு நடிகர் அஜித் குமார் பங்கேற்ற சர்வதேச கார் பந்தய நிகழ்வில் நேரடியாகக் கலந்துகொண்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் இருவரும் ஒரே பிரேமில் இணைந்த அந்த வரலாற்றுத் தருணம் இணையத்தில் தீயாய் பரவியது.
இந்த அரிய சந்திப்பு வீடியோவை முதல்வர் விஜய் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். விஜய் - அஜித் ரசிகர்களை ஒருசேரக் கொண்டாட வைத்த இந்த வீடியோ, வெளியான 20 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகளைக் குவித்து பெரும் சாதனையைப் படைத்தது.
இந்த சாதனையை யாரும் எளிதில் தொட முடியாது என பேசப்பட்டு வந்த நிலையில், நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதி தங்களின் 20-வது திருமண நாளை முன்னிட்டு வெளியிட்ட பிரத்யேக வீடியோஅந்த சாதனையை உடைத்தெறிந்துள்ளது. தங்களின் இருபதாண்டு கால அழகான காதல் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு தொடர்ச்சி என்ற தலைப்பில் இந்த வீடியோவை வெளியிட்டனர்.
சினிமா, குடும்பம் என இரண்டிலும் முன்மாதிரியாகத் திகழும் இந்த நட்சத்திர ஜோடியின் நெகிழ்ச்சியான வீடியோ, வெளியான வெறும் 4 மணி நேரத்திலேயே சுமார் 50 லட்சம் லைக்குகளை அள்ளி அசுர சாதனை படைத்துள்ளது.
விஜய் – அஜித் என்ற இருபெரும் மாஸ் பிரபலங்களின் உலக அளவிலான ரெக்கார்டை, சூர்யா – ஜோதிகாவின் எமோஷனல் காதல் வீடியோ மிகக் குறைந்த நேரத்தில் முறியடித்துள்ளது.
