Kanguva
Kanguva: இந்தியா சினிமாவின் உச்சம் என்று மேடை, மேடையாக ஏறி பேசியும் பல்வேறு நகரங்களுக்கு சென்று புரமோஷன் செய்தும் கூட திரையரங்கில் கங்குவா எடுபடவில்லை. ஒருவேளை தீபாவளிக்கு வந்திருந்தால் பெரும்பாலோனோர் குடும்பத்துடன் பார்த்து ரசித்திருப்பர்.
ஆனால் வந்தா ராஜாவா தான் வருவேன் என ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அடம்பிடித்து ரிலீஸ் தேதியை தள்ளித்தள்ளி கொன்று சென்று கடைசியில் சொதப்பி விட்டனர். சிறுத்தை சிவாவினை நம்பி எப்படி இத்தனை கோடிகளை செலவு செய்கின்றனர்.
இதையும் படிங்க: Nayanthara: ‘சின்னவரிடம்’ சென்ற நயன் பஞ்சாயத்து?… தனுஷின் பதில் என்ன? ,,
ஓரளவு பாசிட்டிவாக இருக்கலாம். ஆனால் யார் என்ன விமர்சனம் கூறினாலும் என்னோட வேலையை நான் சரியா செஞ்சுட்டேன் என்றே சிறுத்தை சிவா தன்னுடைய தவறுகளை ஏற்றுக் கொள்ளாமல் கடுப்பேற்றி வருகிறார். இத்தனைக்கும் அவரின் கடைசி படமான அண்ணாத்தே ரஜினி, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்தும் எடுபடவில்லை.
ரிலீஸ் தேதி
என்ன தைரியத்தில் இவருக்கு எல்லாம் வாய்ப்பு கொடுக்கின்றனர் என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. என்றாலும் அது படம் தயாரிப்பவர் பிரச்சினை என்பதால் நாம் அதனை விட்டுவிடலாம். தற்போது கங்குவா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி 2025ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி கங்குவா அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக இருக்கிறது.
அமேசான்
இந்த படத்திற்காக அமேசான் பிரைம் தளம் ரூபாய் 100 கோடி செலவு செய்துள்ளது. அதனால் தான் பொங்கல் விடுமுறையில் நிறைய பேர் பார்ப்பார்கள் என ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனராம். என்னமோ போடா மாதவா!..
இதையும் படிங்க: தனுஷ் மட்டுமில்ல!. அல்லு அர்ஜூனையும் அசிங்கப்படுத்தும் நயன்!. வைரலாகும் வீடியோ!..
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…