ஒரே படத்தில் அஜித்தை தாண்டிய சூர்யா!.. விஸ்வநாத் & சன்ஸ் பிஸ்னஸ் வேறலெவல்..
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சூர்யா. ஆனாலும் சிங்கம் 2 படத்திற்குபின் சூர்யாவால் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க முடியவில்லை. அவரும் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அவை மிகப்பெரிய வெற்றி படங்களாக அமையவில்லை.
அந்நிலையில்தான். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான கருப்பு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து ரூ.340 கோடி வசூலை பெற்றிருக்கிறது. சூர்யாவின் திரை வாழ்வில் அதிக வசூலை பெற்ற படமாக கருப்பு இருக்கிறது.
இந்நிலையில்தான், வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாதன் & சன்ஸ் படத்தின் வியாபாரம் 300 கோடியை தொட்டிருக்கிறதாம். ரிலீஸுக்கு முன்பே இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு 100 கோடி லாபம் கிடைத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இது அல்லாமல் தியேட்டர் வசூல் மூலம் கிடைக்கும் லாபத்தையெல்லாம் கணக்கு போட்டால் தயாரிப்பாளருக்கு இந்த படம் அதிக லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, வியாபரத்தில் அஜித்தை சூர்யா தாண்டி விட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கருப்பு வெற்றிக்கு பின் சூர்யா தனது சம்பளத்தை 100 கோடியாக உயர்த்தினார். ஒருபக்கம், விஸ்வநாதன் & சன்ஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கிறது. விஸ்வநாதன் & சன்ஸ் படத்திற்கு பின் சூர்யா மலையாள பட இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்ட் அடுத்து ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
