Suriya: கருப்பு.. சூர்யா 46.. சூர்யா 47.. அடுத்தடுத்து அப்டேட் வருது!.. ஃபேன்ஸ் பி ரெடி!..
சூர்யாவுக்கு சிங்கம் 2 க்கு பின் சூப்பர் ஹிட் படம் எதுவும் அமையவில்லை. ஜெய் பீம், சூரரைப் போற்று ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும் அவை ஓடிடியில் வெளியானது. கடந்த பல வருடங்களாகவே பல இயக்குனர்களிடமும் கதை கேட்டு அவரும் பல கதைகளிலும் நடித்து பார்த்தார். ஆனால் அது அவருக்கு வெற்றியை தரவில்லை.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான கங்குவா படத்தில் மிகவும் ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் நடித்தார் சூர்யா. இந்த படத்திற்காக கடுமையான உழைப்பையும் போட்டார். ஆனால் படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை கவராமல் பாக்ஸ் ஆபிஸில் பிளாப் ஆனது. அதோடு படத்திற்கு அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தது.
அதன்பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ரெட்ரோ படமும் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது. அடுத்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் சூர்யா நடித்தார். இந்த படம் ஒரு பக்கா கமர்சியல் மசாலாவாக உருவாகி இருக்கிறது. ஆனாலும் ஆர்ஜே பாலாஜிக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 10 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கும் நிலையே படம் நிறுத்தப்பட்டது. ஒருபக்கம் இப்படத்தின் ஓடிடி உரிமையும் விற்கப்படாததால் இதுவரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

பொறுமை இழந்த சூர்யா லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கப் போய்விட்டார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. இந்நிலையில், சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகியுள்ளது. கருப்பு படத்தின் மீதமுள்ள காட்சிகளுக்கான ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.
ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி. அது முடிந்ததும் கருப்பு படம் முழுவதுமாக முடிவடைகிறது. அதோடு கருப்பு எப்போது ரிலீஸ் என்பதையும் அறிவிக்கப் போகிறார்கள். வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் வரின் 46வது படமும் விரைவில் முடிவடையும் நிலையில் இருக்கிறது. அனேகமாக அடுத்த மாதம் இந்த படம் தொடர்பான அப்டேட் வெளியாகும் என்கிறார்கள். அடுத்து மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தனது 47 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.
