Categories: Cinema News latest news

ஒரே படத்தில் விஜயை ஓவர்டேக் செய்த சூர்யா…ஷாக்கில் ரசிகர்கள்….

திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக நடிகர் விஜய் இருக்கிறார். ரசிகர்கள் இவரை தளபதி என அழைக்கின்றனர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு ரசிகர்கள் உண்டு. இவருக்கு பெண் ரசிகைகளும் அதிகம். எனவேதான் இவர் நடிக்கும் திரைப்படங்களை குடும்பத்துடன் சென்று பார்க்கின்றனர்.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா ஊரடங்கிற்கு பின் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வந்தது. தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அதேபோல், விஜயின் நண்பரும், நடிகருமான சூர்யாவும் தற்போது வளர்ந்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். அவருக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். இவரின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் இந்திய சினிமா வட்டாரத்தில் சூர்யாவை பிரபலப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் 2021ம் ஆண்டு கூகுளில் அதிகமாக தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் 6வது இடத்தை பிடித்துள்ளது.

இதை சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா