Connect with us

Cinema News

இறுதியாக சூர்யாவை ஒத்துக்கொள்ள வைத்த கே.ஜி.எப் குழு.! ரத்த சொந்தத்தை விட்டுக்கொடுக்க முடியாது.!

இதுவரை யாரும் அதிகமாக கண்டுகொள்ளாத கன்னட சினிமாவை தற்போது உலகமே உற்றுநோக்குகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் கே.ஜி.எப் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதற்கு முன்னர் அப்படி ஒரு ஆக்ரோஷமான எமோஷனல் படத்தை இந்த மாதிரி யாரும் பாத்ததில்லை.

அதுவே இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டு சென்றது. கே.ஜி.எப் பாகம்  வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படமும் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6.40க்கு வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழில் ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு வாங்கியுள்ளார். இபபடத்தின் ட்ரைலரை தெலுங்கில் ராம் சரண், மலையாளத்தில் பிரிதிவிராஜ், ஹிந்தியில் கரண் ஜோகர் என பிரபலமானவர்கள் வெளியிட உள்ளனர்.

இதையும் படியுங்களேன் – தனது மகனுக்கே ஸ்கெட்ச் போடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.!? எல்லாம் அந்த போட்டோவால் வந்த வினை.!

அதில் தமிழில் யார் வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கையில், தமிழ் கே.ஜி.எப் 2 ட்ரைலரை சூர்யா வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, சூர்யாவுக்கு நெருங்கிய ரத்த சொந்தம். அதனால் சூர்யா அல்லது கார்த்தி தான் வெளியிடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் தற்போது சூர்யா அந்த ட்ரைலரை வெளியிட உள்ளார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top