Categories: Cinema News latest news

ஆஸ்கர் அகாடமியில் சூர்யா என்ன வேலை செய்ய போகிறார் தெரியுமா.?! வெளியான உண்மை தகவல்…

சமீபத்தில் தமிழ் சினிமாவை பெருமை பட வைத்த செய்தி என்றால் அது உலக புகழ்பெற்ற சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் விருது தேர்வு கமிட்டியில் தமிழ் நடிகரான சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது தான். அதேபோல பாலிவுட்டில் நடிகை கஜோல் அவருக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு மொழிகளில் புகழ்பெற்று வரும் சினிமா கலைஞர்களின் கனவாக இருப்பது ஆஸ்கர் விருது. இந்த விருது தான் சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. உலகில் பல்வேறு மொழிகளில் சிறந்த படங்களை தேர்வு செய்து அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அப்படிப்பட்ட இந்த விருது விழா கமிட்டியில் நடிகர் சூர்யா அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்த மாதிரியான வேலை அங்கு இருக்கிறது என்பதை பார்த்தால், அவர் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்யும் விருது கமிட்டியில் இடம்பெற்றுள்ளார்.

இதையும் படியுங்களேன் – யானை பிளிறியதா.? பதுங்கியதா.? மாமன் மச்சான் சேர்ந்து என்ன செய்துள்ளனர்.?! டிவிட்டர் விமர்சனம் இதோ…

இந்த கமிட்டியில் இவரை சேர்த்து மொத்தம் நாம் 397 பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஆஸ்கர் கமிட்டி தாங்கள் தேர்வு செய்து வைத்துள்ள நாமினேஷன் லிஸ்டில் உள்ள படங்களை அவர்களுக்கு அனுப்பி விடும். அவர்கள் அந்த படங்களை பார்த்து எது விருதுக்கு தகுதி பெறும் என்பதை தேர்வு செய்வார்கள்.

அப்படி இந்த 397 பேரில் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெறும் படங்களுக்கு அந்த ஆஸ்கர் விருது வழங்கப்படும். இதுவே சூர்யாவின் ஆஸ்கார் தேர்வு குழு பணியாகும்.

Manikandan
Published by
Manikandan