Categories: Cinema News latest news

அண்ணானு கூப்பிட்டடா சூர்யாவுக்கு சுத்தமாக பிடிக்காது.! அம்மா நடிகை கூறிய சூப்பர் சீக்ரெட் இதோ…

சேது படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாலா அடுத்ததாக இயக்கிய திரைப்படம் நந்தா. இந்த திரைப்படத்தில் சூர்யா, ராஜ்கிரண், லைலா, கருணாஸ் என பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

இதில் சூர்யாவுக்கு அம்மாவாக ராஜஸ்ரீ எனும் நடிகை நடித்திருப்பார். இவர் அதற்கு முன்னர் கருத்தம்மா படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்தாலும், உண்மையில் சூர்யாவை விட 5வயது அந்த நடிகை சிறியவராம்.

அதன்காரணமாக ஷூட்டிங் சமயத்தில் சூர்யாவை பார்த்து,’ அண்ணா’ என்று தான் அழைப்பாராம். உடனே சூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா,’ என்னை அண்ணா என்று கூப்பிடாதே.’ என்று செல்லமாக கடிந்து கொள்வாராம்.

இதையும் படியுங்களேன் – நம்ப வைத்து கழட்டிவிட்ட சிம்பு.!? கைகொடுத்த சென்சேஷனல் காமெடி ஹீரோ..

அண்மையில் இயக்குனர் பாலா சந்தித்து மீண்டும் நான் உங்கள் படத்தில் நடிக்கலாமா? என்று கேட்டுள்ளாராம். அதற்கு நீ நடிப்பதாக இருந்தால் உன்னை நான் இயக்குகிறேன் என்று பாலா கூறினாராம். அடுத்த தற்போது பாலா இயக்கி வரும் சூர்யா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சூர்யா தற்போது அவரது 41வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை நந்தா பட இயக்குனர் பாலா தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் பாண்டிச்சேரியில் நடைபெறும் என கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan