Categories: Cinema News latest news

பிரியங்காவை கட்டிலில் பிடித்து இழுக்கும் சூர்யா.! வெளியான சூப்பர் வீடியோ.!

சூர்யா நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. அடுத்த வாரம் 10ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து , இபபடத்தின் ட்ரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. இப்படத்தின் ட்ரைலரை சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

பாண்டிராஜ் படமென்பதால், கண்டிப்பாக அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படி அமைந்திருக்கும் என அனைவரும் எதிர்பாத்தது போலவே டிரைலரும் இருக்கிறது என்றே கூறவேண்டும்.

இதையும் படியுங்களேன் – குளியலறையில் நடிகரின் கன்னத்தை பதம் பார்க்கும் பேச்சிலர் நாயகி.! வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!

படத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து படம் பேசும் என தெரிகிறது. பக்கா ஆக்சன் கமர்சியல் திரைப்படமாக இது உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும், சூர்யா – ப்ரியங்கா மோகன் இடையேயான காட்சிகள் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

ஒரு காட்சியில், கட்டிலில் இருக்கும் ப்ரியங்கா காலை பிடித்து சூர்யா இழுத்து அருகில் அமர்த்துவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த காட்சியிலேயே ப்ரியங்கா போனில் நேத்து நைட் என்ன நடந்தது தெரியுமா என கேட்கிறார். கண்டிப்பாக அந்த காட்சி இளசுகளை கவரும் என கூறப்படுகிறது. அது போக, படத்தில் அனைவரும் எதிர்பார்த்த குடும்ப செண்டிமெண்ட், ஆக்சன், சூர்யா மாஸ் பஞ்ச் வசனம் என இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Manikandan
Published by
Manikandan