அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சூர்யா? - ஒரே ரத்தக்களறிதான்!...
தமிழில் ராக்கி என்கிற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். அந்த படத்திலேயே ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அடுத்து கீர்த்தி சுரேஷை வைத்து அருண் மாதேஸ்வரன் இயக்கிய சாணி காயிதம் திரைப்படத்திலும் அதுபோன்றே வன்முறை காட்சிகள் இடம் பெற்றன.
அதன்பின் தனுசை வைத்து கேப்டன் மில்லர் என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அடுத்து லோகேஷ் கனகராஜை வைத்து டிசி என்கிற திரைப்படத்தையும் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். இதில் டிசி திரைப்படம் வன்முறை காட்சிகளை கொண்ட படமாக இருந்தாலும் அதை அருண் மாதேஸ்வரன் சொன்ன விதம் ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால் படம் வெற்றி பெற்றது..
இந்நிலையில்தான் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகி வருகிறது. அருண் மாதேஸ்வரன் சொன்ன கதை சூர்யாவுக்கு பிடித்து போய்விட்டதால் அந்த படம் தொடங்கப்படலாம் என்கிறார்கள். இந்த படத்திலும் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சிலரோ சூர்யா இப்போதுதான் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், சீன் என வெற்றி படங்களை கொடுத்து ஒரு நல்ல ரூட்டில் பயணித்து வருகிறார். அப்படி இருக்கும்போது அருண் மாதேஸ்வரன் படத்தில் நடிக்காமல் தவிர்ப்பது நல்லது எனவும் கூறுகிறார்கள்.
