Categories: Cinema News latest news

உனக்கு இது.! எனக்கு அது.! படபிடிப்பில் பங்கு போடும் சூர்யா.!

சூர்யா நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக அடுத்தடுத்து படங்கள் தயாராக உள்ளன. சூரரை போற்று, ஜெய் பீம்,  எதற்கும் துணிந்தவன் என ஹாட்ரிக் வெற்றி கொடுத்து மீண்டும் பழைய பார்முக்கு திரும்பிய சூர்யா வீறு நடை போட்டு அடுத்த படத்தில் களமிறங்கியுள்ளார்.

அடுத்ததாக சூர்யா பாலா, இயக்கத்தில் ஓர்  படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. அந்த படத்தை சூர்யாவே தயாரிக்க உள்ளார். இந்த படத்தை அடுத்து, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.

ஜல்லிக்கட்டை மையப்படுத்திய திரைப்படம் என்பதால், தற்போது அதற்கான ஒத்திகை ஷூட்டிங் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் செட் போட்டு எடுக்கப்பட்டு வருவதால், அங்கு திரளானோர் கலந்துகொண்டு உள்ளனர்.

இதையும் படியுங்களேன் – அந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது முரளிதான்… 25 வருடம் கழித்து வெளிவந்த உண்மை….

அங்கு மக்கள் கூட்டம் இருப்பதை போல, ஜல்லிக்கட்டு காளைகளும் அதிகமாக இருக்கிறதாம். அங்கு வைத்து தான் சூர்யாவுக்கு எந்த காளை, மற்ற நடிகர்களுக்கு எந்தெந்த காளைகள் என தேர்வு செய்து அதனை பழக்கி வருகின்றனராம். இங்கு ஒரு வார பயிற்சிக்கு பின்னர், பாலா படம் முடிந்த பிறகு வாடிவாசல் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan