Connect with us

Cinema News

நல்ல வேளை இப்போவே முடிஞ்சது.! நிம்மதி பெருமூச்சு விடும் சூர்யா.!

தொடர்ந்து தனுஷை வைத்து இயக்கி பல தரமான சூப்பர் ஹிட்களை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் , தற்போது மற்ற நடிகர்களை இயக்குவதில் ஆர்வம் கொண்டு அடுத்ததடுத்த வேலைகளில் பிசியாக இயங்கி வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து வரும் விடுதலை திரைப்படம் தயாராகி வருகிறது. குறுகிய கால படம் என ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது பெரிய திரைப்படமாக வளர்ந்து வருகிறது.

அதன் ஷூட்டிங் இன்னும் பாக்கி இருக்கிறது. விஜய் சேதுபதி பிஸியாகிவிட்டதால், அந்த பட ஷூட் தாமதமாவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட,  வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த வாடிவாசல் திரைப்படம் தற்போது முதற்படியை வெற்றிகரமாக எடுத்து வைத்துள்ளது.

இந்த திரைப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் இன்று முதல் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை அருகே செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. ஒரு வாரம் ஷூட் நடைபெறும். அதன் மூலம், மெயின் ஷூட்டிங்கில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம். எதனையெல்லாம் மேம்படுத்தலாம் என படக்குழு தீர்மானிக்கும்.

இதையும் படியுங்களேன் – அடையாளமே தெரியலயே!.. நம்ம ஆக்சன் கிங்கா இது?! அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!

இதனால், தற்போது சூர்யா தான் ஹேப்பி ஆயிருப்பார் என கூறப்படுகிறது. ஆம், வெற்றிமாறன் ஷூட்டிங் செய்யும் போது தான் எதிர்பார்த்தது சரியாக வரவில்லை என்றால், மீண்டும் ஷூட் செய்வார். ஆனால், வாடிவாசல் படத்திற்காக முன்கூட்டியே இந்த டெஸ்ட் ஷூட்டிங் நடைபெறுவதால், உண்மையான ஷூட்டிங்கின் போது மிகவும் உதவிகரமாக இருக்கும். அதனால், படம் குறித்த நேரத்தில் முடிய அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top