Vishwanath & Sons Box Office : குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமான விஸ்வநாத் & சன்ஸ்!

 
Vishwanath and sons

3 நாட்களில் 'விஸ்வநாத் & சன்ஸ்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. கருப்பு படத்தின் ஹிட்டுக்கு பிறகு சூர்யா நடித்திருக்கும் புது படம் தான் 'விஸ்வநாத் & சன்ஸ்'.

வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உலகமெங்கும் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளி வந்தது.

இதில் மமிதா பைஜு தான் சூர்யாவிற்கு ஜோடி. இவர்களுடன் இணைந்து ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், சுனில் ரெட்டி, நாசர், காளி வெங்கட், சுதா ஆகியோர் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வரும் இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்பட லிஸ்ட்டில் சேர்ந்து விட்டது. பாக்ஸ் ஆபிஸில் கடந்த 3 நாட்களிலேயே உலக அளவில் ரூ.110.22 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

From Around the web