Vishwanath & Sons Box Office : வசூல் மழையில் விஸ்வநாத் & சன்ஸ்!

 
Vishwanath and sons

4 நாட்களில் 'விஸ்வநாத் & சன்ஸ்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. தொடர்ந்து 'கங்குவா, ரெட்ரோ, கருப்பு' என ஆக்ஷன் படங்களாக செலக்ட் பண்ணி நடித்து வந்தார் சூர்யா.

குடும்பங்கள் ரசிக்கும் வகையில் ஒரு படம் பண்ண வேண்டும் என்பதற்காகவே, சூர்யா டிக் அடித்த படம் தான் 'விஸ்வநாத் & சன்ஸ்'. 'லக்கி பாஸ்கர்' இயக்குநர் வெங்கி அட்லூரி தான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாக எடுக்கப்பட்ட இப்படம் கடந்த வாரம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் ஹீரோயினாக மமிதா பைஜு நடித்திருக்கிறார்.

இப்படம் ரிலீஸ் ஆன நாளில் இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்த வண்ணமிருக்கிறது. தற்போது, இந்த படம் கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.120.88 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web