Vishwanath & Sons Box Office : 5 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் பண்ண வசூல் சாதனை!

 
Vishwanath and sons

5 நாட்களில் 'விஸ்வநாத் & சன்ஸ்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'லக்கி பாஸ்கர்' படத்துக்கு பிறகு தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள புதிய படம் தான் 'விஸ்வநாத் & சன்ஸ்'.

கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆன இதில் 'The One' சூர்யா தான் ஹீரோவாக வலம் வந்துள்ளார். அவருக்கு ஜோடியாக 'டியூட்' மமிதா பைஜு நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இந்த படத்திற்கு இசையமைத்தார்.

என்ன தான் சூர்யாவின் முந்தைய படமான 'கருப்பு' ஹிட்டானாலும், 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்துக்கான டிக்கெட் புக்கிங் துவங்கிய போது, மிக குறைவான டிக்கெட்களே புக்கானது.

முதல் நாள் முதல் ஷோவை பர்த்துவிட்டு, நல்ல விமர்சனங்கள் வரவே படம் வசூலிலும் அடுத்த கட்டத்துக்கு சென்றது. கடந்த 5 நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் உலக அளவில் ரூ.128.60 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம். 

From Around the web