Vishwanath & Sons Box Office : 6 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Vishwanath and sons

6 நாட்களில் 'விஸ்வநாத் & சன்ஸ்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஃபேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்து உருவாகியுள்ள புதிய படம் தான் 'விஸ்வநாத் & சன்ஸ்'.

இதில் ஹீரோவாக சூர்யா நடிக்க, வெங்கி அட்லூரி இதை இயக்கியுள்ளார். இவர்கள் காம்பினேஷனில் ரெடியான முதல் படம் இதுதான்.

கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக இப்படம் வெளி வந்தது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக டூயட் பாடி ஆடியிருக்கிறார் மமிதா பைஜு. நம்ம ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இதற்கு இசை.

இப்படம் டார்கெட் ஆடியன்ஸை முழு திருப்தி படுத்தவில்லை என்றாலும், தோல்வி படங்களின் லிஸ்ட்டில் சேராமல், நல்ல படங்களின் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டது. தற்போது, இந்த படம் கடந்த 6 நாட்களில் உலக அளவில் ரூ.135.49 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

From Around the web