Vishwanath & Sons Box Office : ஒரே வாரத்தில் விஸ்வநாத் & சன்ஸ் செய்த வசூல் இவ்ளோவா?
ஒரு வாரத்தில் 'விஸ்வநாத் & சன்ஸ்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. சூர்யா நடிப்பில் 'விஸ்வநாத் & சன்ஸ்', ஜித்து மாதவன் இயக்கும் 'சூர்யா 47', த.செ.ஞானவேல் இயக்கும் 'சூர்யா 48' என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். இப்படம் கடந்த வாரம் ஆகஸ்ட் 14 அன்று தான் திரைக்கு வந்தது. அதுவும் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு மொழியிலும் வெளியானது.
இதில் ஹீரோயினாக மமிதா பைஜு நடித்திருந்தார். ரசிகர்களுக்கு 'கருப்பு' படத்தின் வெற்றி பத்தவில்லை என்று, இந்த படத்தையும் ஹிட் லிஸ்ட்டில் சேர்ப்பதற்காகவே பண்ணியிருக்கிறார் சூர்யா.
முதல் பாதியை கொண்டாடியும், இரண்டாம் பாதியில் தான் சில குறைகள் இருப்பதாகவும் பார்த்தவர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள். தற்போது, இப்படம் கடந்த 7 நாட்களில் உலக அளவில் ரூ.141.32 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.