'விஸ்வநாத் & சன்ஸ்' இசை வெளியீட்டு விழாவுக்கு நாள் குறித்த சூர்யா!

 
Vishwanath & Sons

தொடர்ந்து ஆக்ஷன் படங்களிலேயே மாஸ் காட்டி வரும் சூர்யா, ஃபேமிலி ஆடியன்ஸுக்கு பிடித்த மாதிரி படங்களில் நடித்து ரொம்ப நாளாச்சு. அந்த குறையை போக்க வருகிறது 'விஸ்வநாத் & சன்ஸ்'.

இந்த படத்தை 'வாத்தி' இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க, ஹீரோயினாக 'ஜன நாயகன்'-ல் விஜய்யின் வளர்ப்பு மகளாக வந்த மமிதா பைஜு நடித்திருக்கிறார்.

ஆல்ரெடி ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் வெளியான 'பட்டாம்பூச்சி' பாடல் மற்றும் நேற்று (ஜூலை 25-ஆம் தேதி) வெளியிடப்பட்ட 'தி வெட்டிங்' பாடல் ஆகிய இரண்டுமே இளசுகளிடம் லைக்ஸ் அள்ளியது.

தற்போது, இதன் இசை வெளியீட்டு விழாவை வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகிறது. 

From Around the web