ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிக்கும் சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் 'பட்டாம்பூச்சி' பாடல்!
சூர்யாவுக்கு கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட்டிலும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவரது ரசிகர்களுக்கு விருந்தாக சமீபத்தில் வெளியான 'கருப்பு' படம் மிகப் பெரிய வசூல் வேட்டை ஆடியது.
இதனைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படமான 'விஸ்வநாத் & சன்ஸ்' ரெடியாகி விட்டது. இந்த படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர ப்ளான் போட்டுள்ளனர்.
இம்முறை சூர்யா தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் நாசர், ராதிகா, ரவீனா டாண்டன், காளி வெங்கட், சுனில் ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
A first is always special - here’s the first single from #VishwanathandSons #Pattampoochi ▶️ https://t.co/u2b0TXiJbi #NenoButterfly ▶️ https://t.co/KbzGSTQePo
— Suriya Sivakumar (@Suriya_offl) June 19, 2026
a @gvprakash musical 🎶
🎤 @Sublahshini
🖋️ @Arunrajakamaraj / @ramjowrites #VASonAUG14th #VenkyAtluri… pic.twitter.com/uMbeIlJilf
தற்போது, இதன் முதல் சிங்கிள் ட்ராக் 'பட்டாம்பூச்சி'-யை சூர்யா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்பாடல் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.
