சூர்யா ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டில் இடம்பிடித்த விஸ்வநாத் & சன்ஸ் The One Rule பாடல்!
சூர்யா நடித்து மெகா ஹிட்டான 'கருப்பு' படம் ரசிகர்களுக்கு பத்தவில்லையாம். அடுத்த படத்தை ரெடி பண்ணி விட்டார் 'The One'.
வெங்கி அட்லூரி இயக்கியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகப்போகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக 'ஜன நாயகன்' மமிதா பைஜு நடித்துள்ளார்.
ஆல்ரெடி ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் இதன் இரண்டு பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. நேற்று தான் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக கோவையில் நடைபெற்றது.
A @gvprakash musical banger for #TheOneRule ⭐️ to ignite the euphoria 🔥
— Sithara Entertainments (@SitharaEnts) August 3, 2026
Live on Spotify. https://t.co/YCkOuPWBKs#VishwanathAndSons #VASonAUG14th
தற்போது, படத்தின் மூன்றாவது பாடலான 'The One Rule'-ஐ ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடல் சூர்யா ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து வருவதுடன், அவர்களின் ப்ளேலிஸ்ட்டிலும் இடம்பிடித்துள்ளது.
