சூர்யாவின் பர்த்டே ஸ்பெஷல்... வெளியானது 'விஸ்வநாத் & சன்ஸ்'-ன் 'The Wedding Song' ப்ரோமோ!
நடிகர் சூர்யா நடிப்பில் 'விஸ்வநாத் & சன்ஸ், சூர்யா 47 மற்றும் சூர்யா 48' ஆகிய மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறது.
இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகப்போகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக 'ஜன நாயகன்' மமிதா பைஜு நடித்திருக்கிறார்.
இதை 'லக்கி பாஸ்கர்' இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஆல்ரெடி இதன் 'பட்டாம்பூச்சி' பாடல் வெளி வந்தது.
Turn the volume up 😎
— Sithara Entertainments (@SitharaEnts) July 23, 2026
The celebrations are just getting started 🔥#VASSecondSingle ~ #TheWeddingSong Tamil Promo out now ❤️
Full Song on July 25th.
Sung by THE ONE @Suriya_offl 🎙️
A @gvprakash Musical 🎧 #VishwanathAndSons #VASonAUG14th #VenkyAtluri @_mamithabaiju… pic.twitter.com/TjQwiV1Edl
இந்நிலையில், இன்று (ஜூலை 23-ஆம் தேதி) சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் செகண்ட் சிங்கிள் டிராக் 'The Wedding Song'-ன் ப்ரோமோவை ரிலீஸ் செய்துள்ளனர். முழு பாடல் வருகிற ஜூலை 25-ஆம் தேதி வெளியாகுமாம்.
