ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிக்கும் விஸ்வநாத் & சன்ஸ் ட்ரெய்லர்!

 
Vishwanath & Sons

சூர்யா - மமிதா பைஜு ஜோடியாக நடித்துள்ள புதிய படம் 'விஸ்வநாத் & சன்ஸ்'. இந்த படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி தான் இயக்கியிருக்கிறார்.

இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமீபத்தில், இதன் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

தற்போது, படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் சூர்யாவின் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் அள்ளி வருகிறது. படத்தை வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

From Around the web