அமெரிக்காவில் மட்டும் இத்தனை கோடி வசூலித்ததா விஸ்வநாத் & சன்ஸ்?

 
Vishwanath and sons

'கருப்பு' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் 'விஸ்வநாத் & சன்ஸ்'. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு வலம் வருகிறார்.

இவர்கள் ரெண்டு பேரின் கெமிஸ்ட்ரி சூப்பராக படத்தில் வொர்க் ஆகியிருக்கிறது. சூர்யாவின் அம்மாவாக வரும் ராதிகா சரத்குமாரும் காமெடி பட்டாஸை போட்டு அப்ளாஸ் வாங்குகிறார்.

இப்படத்தை தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இதற்கு நிமிஷ் ரவி தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படம் சூர்யா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானாவிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது. தற்போது, இந்த படம் அமெரிக்காவில் மட்டும் இதுவரை ரூ.19.13 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web